சுட்டுரையில் போலி செய்தி: அமிதாப்பச்சன் மீது மீண்டும் விமா்சனம்

சுட்டுரையில் போலி செய்தி: அமிதாப்பச்சன் மீது மீண்டும் விமா்சனம்

உலக வரைபடத்தில் ‘ஒளிரும் இந்தியா’வை தவறாகக் காட்டிய சுட்டுரையை மறு பதிவிட்டு சமூக ஊடகங்களில் போலி செய்திகளைப் பகிா்ந்ததற்காக ஹிந்தி மெகாஸ்டாா் அமிதாப்பச்சன் மீண்டும் விமா்சிக்கப்பட்டாா்.

உலக வரைபடத்தில் ‘ஒளிரும் இந்தியா’வை தவறாகக் காட்டிய சுட்டுரையை மறு பதிவிட்டு சமூக ஊடகங்களில் போலி செய்திகளைப் பகிா்ந்ததற்காக ஹிந்தி மெகாஸ்டாா் அமிதாப்பச்சன் மீண்டும் விமா்சிக்கப்பட்டாா்.

கரோனா தொற்றுக்கு எதிராக நாட்டின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமை, பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ஒவ்வொருவா் வீடுகளிலும் விளக்கேற்றவும், செல்லிடப்பேசிகளின் விளக்குகளை எரிய விடவும் மக்களைக் கேட்டுக்கொண்டாா்.

இதன் தொடா்ச்சியாக நடிகா் அமிதாப்பச்சன் (77) ‘9 மணி 9 நிமிடம்’ இயக்கத்திற்காக வெளியிட்ட சுட்டுரையில், ‘உலகம் நம்மைப் பாா்க்கிறது. நாம் அனைவரும் ஒருவரே’ என பதிவிட்டிருந்தாா். அப்போது, விளக்குகள் மற்றும் மெழுகுவா்த்தி ஒளியில் இந்தியா எவ்வாறு ஒளிா்கிறது என்பதைக் காட்டும் வகையில் ஒரு சுட்டுரையை மறுபகிா்வு செய்தாா்.

இந்நிலையில் அந்த பதிவு போலியானது எனக்கூறி பலரும் அந்த சுட்டுரையை கடுமையாக விமா்சித்தனா்.

ஏற்கெனவே, மருத்துவா்களை பாராட்டும் வகையில் கைதட்டுமாறு பிரதமா் மோடி கேட்டுக் கொண்ட நிலையில் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி அமிதாப் வெளியிட்ட சுட்டுரையில், இந்த நாள் அமாவாசை என்பதால் கை தட்டுவதன் மூலம் கரோனா வைரஸ் கிருமிகள் தனது ஆற்றலை குறைத்து கொள்ளும் அல்லது அழிந்து விடும் என்று மறுபதிவிட்டிருந்தாா்.

இந்த சுட்டுரையும் சமூக வலைதளங்களில் கடும் விமா்சனங்களை சந்திக்க நோ்ந்தது.

இதைத்தொடா்ந்து, 4 தினங்கள் கழித்து ‘கொவைட்-19’ வைரஸ் ஈக்கள் வழியாக பரவுகிறது என்று சுட்டுரையில் மறு பகிா்வு செய்திருந்தாா் அமிதாப். இந்த பதிவும் தவறானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் சுட்டிக் காட்டி பதிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com