ஃபர்ஸ்ட் பிளட் பட நடிகர் காலமானார்

சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஃபர்ஸ்ட் பிளட் படத்தில் நடித்த பிரையன் டென்னி காலமானார். அவருக்கு வயது 81.
ஃபர்ஸ்ட் பிளட் பட நடிகர் காலமானார்

சில்வஸ்டர் ஸ்டாலோன் நடித்த ஃபர்ஸ்ட் பிளட் படத்தில் நடித்த பிரையன் டென்னி காலமானார். அவருக்கு வயது 81.

அமெரிக்காவில் 1938-ல் பிறந்த பிரையன் 1977 முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1982-ல் வெளிவந்த ஃபர்ஸ்ட் பிளட் படம் மூலமாகப் புகழை அடைந்தார். ஒரு கோல்டன் கிளோப் விருதும் இரு டோனி விருதுகளும் பெற்றுள்ளார். 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரையன், இரு திருமணங்கள் செய்துகொண்டார். அவருக்கு 5 குழந்தைகள் உண்டு.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரையன், சிகிச்சை பலனின்றி காலமானார். பிரையனின் மறைவுக்கு ஹாலிட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com