ட்விட்டரை ஒழித்துக் கட்ட வேண்டும்: ஆவேசக் கொடி பிடிக்கும் பாலிவுட் நடிகை

சமூக வலைதளமான ட்விட்டரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகை ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

மும்பை: சமூக வலைதளமான ட்விட்டரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகை ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் வரலாற்றுப் படமான 'தலைவி' யில் நடித்து வருகிறார்.

கங்கனாவின் சமூக வலைத்தள கணக்குகளை அவரது சகோதரி ரங்கோலி கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் கரோனா தொற்று தொடர்பாக ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களை விமர்சித்து அவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பாலிவுட் சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட  பலரும் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டர் நிறுவனத்திற்கு புகார் அளித்தனர். அதையடுத்து கங்கானவின் கணக்கை ட்விட்டர் நிறுவனம்  வெள்ளியன்று நீக்கியது .

இதுதொடர்பாக சனிக்கிழமையன்று கங்கனா ரனாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

எனது ட்விட்டர் கணக்கில் இடப்பட்ட பதிவில் கரோனாவிற்கு எதிராக தங்களது பணியில் போராடி வரும் மருத்துவரையும், காவல்துறையினரையும் தாக்கியவர்களைத் தான் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றுதான் என் சகோதரி கூறியுள்ளார். எந்த ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் பற்றியும் பேசவில்லை.

இங்கு பிரதமர், உள்துறை அமைச்சர் போன்றோரை தீவிரவாதிகள் என்று சொல்பவர்களை ட்விட்டர் நிறுவனம் ஒன்றும் செய்வதில்லை. ஆனால் உண்மையான தீவிரவாதிகளை தீவிரவாதிகள் என்று சொன்னால் உடனே நடவடிக்கை எடுக்கிறது.

எனவே ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை ஒழிக்க வேண்டும். அதற்குப் பதிலாக இந்தியாவைச் சேர்ந்த புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com