டொரண்டோ பட விழாவில் திரையிடப்படும் கைதி

இத்திரைப்பட விழா ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெறவுள்ளது.
டொரண்டோ பட விழாவில் திரையிடப்படும் கைதி

கார்த்தி நடித்த கைதி படம் டொரண்டோ விழாவில் திரையிடப்படவுள்ளது.

பிகில் படத்துக்குப் போட்டியாகக் கடந்த வருட தீபாவளி சமயத்தில் வெளியான கைதி படம், ரூ. 100 கோடி வசூலித்துச் சாதித்தது.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள கைதி படத்தை இயக்கினார். இசை - சாம் சிஎஸ்.

பாடல்களும் இல்லாமல் கதாநாயகி என்கிற கதாபாத்திரமும் இல்லாமல் எனவே துளிக் காதல் காட்சிகளும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு தமிழ்ப் படம் ரூ. 100 கோடி வசூலித்தது பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு மற்றும் கார்த்தி ஆகியோரைப் போல இதர தமிழ்த் திரைக் கலைஞர்களும் இதுபோன்ற வித்தியாசமான முயற்சிகளை அதிகம் மேற்கொள்ளவேண்டும் என்கிற செய்தியை இந்த வசூல் நிலவரம் வழியாக உணர்த்தியுள்ளார்கள் தமிழ் ரசிகர்கள். 

கைதி படம் தற்போது ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமிழில் இப்படத்தைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸும் ரிலையன்ஸ் எண்டர்டயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து ஹிந்தி கைதியைத் தயாரிக்கின்றன. கார்த்தி வேடத்தில் பிரபல நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். அடுத்த வருடம் பிப்ரவரி 12 அன்று வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கைதி படம் டொரண்டோ விழாவில் திரையிடப்படவுள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இத்திரைப்பட விழா ஆகஸ்ட் 9 முதல் 15 வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com