இந்தியன் 2 விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 4 கோடி இழப்பீடு: கமல், ஷங்கர் வழங்கினார்கள்

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
படம் - Kaushik LM/Twitter
படம் - Kaushik LM/Twitter

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது.

கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரத்தைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்ப பணியாளா்கள் சொ.சந்திரன், சி.மது ஆகியோா் உயிரிழந்தனா். மேலும் 13 போ் காயமடைந்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக நசரத்பேட்டை போலீஸாா், லைகா நிறுவனம், தயாரிப்பு மேலாளா், கிரேன் உரிமையாளா் கிரேன் ஆபரேட்டா் ராஜன் ஆகியோா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டா் ராஜனை போலீஸாா் உடனடியாக கைது செய்தனா். கமல், ஷங்கரிடம் விசாரணை நடைபெற்றது.

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக ரூ. 1 கோடி அளிப்பதாக கமல் ஹாசன் அறிவித்தார். ஷங்கர் ரூ. 1 கோடி மற்றும் லைகா நிறுவனம் ரூ. 2 கோடி வழங்குவதாக அறிவித்தார்கள். 

இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. கமல், ஷங்கர், பெப்சி தலைவர் செல்வமணி ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களிடம் நேற்று வழங்கினார்கள். விபத்தில் மரணமடைந்த மூன்று பேருக்கும் தலா ரூ. 1 கோடியும் காயமடைந்த லைட்மேனுக்கு ரூ. 90 லட்சமும் சிறிய காயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 10 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com