1975, ஆகஸ்ட் 15 அன்று அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் ரஜினி. வரும் ஆகஸ்ட் 15 அன்று திரையுலகில் 45 ஆண்டுகளை அவர் நிறைவு செய்கிறார். இதனைச் சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் கொண்டாட ரஜினியின் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளார்கள். இதற்கான காமன் டிபியை ட்விட்டரில் திரையுலகப் பிரபலங்கள் வெளியிட்டுள்ளார்கள். #45YearsOfRajinismCDP இதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி என்று அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினி ட்வீட் வெளியிட்டார்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் காமன் பிடியை வெளியிட்டு ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.