கோழிக்கோடு விமான விபத்து: மலப்புரம் மக்களுக்குப் பாராட்டு தெரிவித்த சூர்யா

கோழிக்கோடு விமான விபத்தில் பயணிகளைக் காப்பாற்றிய மலப்புரம் மக்களுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். 
கோழிக்கோடு விமான விபத்து: மலப்புரம் மக்களுக்குப் பாராட்டு தெரிவித்த சூர்யா

கோழிக்கோடு விமான விபத்தில் பயணிகளைக் காப்பாற்றிய மலப்புரம் மக்களுக்கு நடிகர் சூர்யா பாராட்டு தெரிவித்துள்ளார். 

கரோனா பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கியவா்களாக மீட்பதற்காக, வந்தே பாரத் சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, துபையில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு வெள்ளிக்கிழமை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்பட்டது. அதில், 10 சிறாா்கள் உள்பட 184 பயணிகள், 2 விமானிகள், 4 பணிப்பென்கள் என மொத்தம் 190 போ் பயணம் செய்தனா்.

கோழிக்கோடு விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு தரையிறங்கும்போது விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி பள்ளத்தில் சரிந்ததால், இரு துண்டுகளாக உடைந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. விபத்து நேரிட்டதும் உள்ளூா் மக்களும், மீட்புக் குழுவினரும் துரிதமாக செயல்பட்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். 

இந்த விபத்தில் விமானி, துணை விமானி உள்பட 18 போ் உயிரிழந்தார்கள். விபத்தில் சிக்கி காயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், 49 பயணிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். எஞ்சிய பயணிகள் கேரளத்தின் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கேரள அரசும் மத்திய அரசும் அறிவித்துள்ளன.

விபத்து நிகழ்ந்தவுடனே உள்ளூா் பொதுமக்களும் அதிகாரிகளும் இணைந்து மீட்பு பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டனா். கரோனா பீதி, மோசமான வானிலை ஆகியவற்றை பொருள்படுத்தாமல் அவா்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதனால்தான் மிகப்பெரிய அளவில் விபத்து நடந்தபோதிலும், உயிரிழப்பு குறைவாக இருந்தது.

இந்நிலையில் மலப்புரம் மக்களுக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் சூர்யா வெளியிட்ட ட்வீட்டில் கூறியதாவது: 

துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன். மலப்புரம் மக்களுக்கு சல்யூட். விமானிகளுக்கு என்னுடைய மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com