சுசாந்த் சிங் விவகாரத்தில் பாலிவுட் அமைதி காப்பது ஏன்?: நடிகை கேள்வி!

யானை மீதான தாக்குதல் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் கருத்து தெரிவிக்கிறார்கள்.
சுசாந்த் சிங் விவகாரத்தில் பாலிவுட் அமைதி காப்பது ஏன்?: நடிகை கேள்வி!

சுசாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக பாலிவுட் அமைதி காப்பது ஏன் என நடிகை ஷில்பா ரைஸாதா கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மகன் சுசாந்த் சிங்கைத் தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.15 கோடி மாயமான விவகாரத்தில் தொடா்பு இருப்பதாகக் கூறி, நடிகை ரியா சக்ரவா்த்தி, அவரது தாயாா் சந்தியா சக்ரவா்த்தி, தந்தை இந்திரஜித் சக்ரவா்த்தி, சகோதரா் ஷோயிக் உள்ளிட்ட சில நபா்கள் மீது சுசாந்த் சிங்கின் தந்தை கே.கே. சிங், பாட்னா போலீஸில் புகாா் அளித்திருந்தாா். இந்தப் புகாா் தொடா்பாக அந்த மாநில காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்தனா். அந்த வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளார் ரியா. இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுசாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக அமைதி காக்கும் பாலிவுட்டை நடிகை ஷில்பா ரைஸாதா விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது:

சுசாந்த் சிங்குக்கு நியாயம் கிடைக்கவேண்டும். பாலிவுட் ஏன் அமைதி காக்கிறது? சுசாந்த் சிங் வாழ்க்கை குறித்து யாரும் ஒரு வார்த்தை கூறவில்லை, ஆனால் சமூகவலைத்தளங்களில் அனைவரும் மும்முரமாக உள்ளார்கள். யானை மீதான தாக்குதல் உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் கருத்து தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் யாரும் குரல் எழுப்பவில்லை. இது வருத்தமானது.

சுசாந்த சிங் இறந்த பிறகு அவருடைய நடிப்பைப் பாராட்டுபவர்கள் அவர் உயிருடன் இருந்தபோது அதைத் தெரிவித்திருக்க வேண்டும். இதன்மூலம் நாமும் அவருக்கு அநியாயம் செய்துள்ளோம். அவர் உயிருடன் இருந்தபோது இதையெல்லாம் செய்திருந்தால் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருப்பார். அவர் நடித்த படத்தைப் பற்றிய பாராட்டுகளைப் படிக்க அவர் உயிருடன் இருந்திருக்க வேண்டும் என விருப்பப்படுகிறேன். எனக்கு தில் பேச்சாரா படம் பிடித்திருந்தது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com