கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4: அதிகாரபூர்வமாக அறிவித்தது விஜய் டிவி

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 4: அதிகாரபூர்வமாக அறிவித்தது விஜய் டிவி

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கி வருகிறார். பிக் பாஸ் முதல் சீசனை நடிகர் ஆரவ்வும் 2-வது சீசனை நடிகை ரித்விகாவும் கடந்த வருடப் போட்டியை முகென் ராவும் வென்றார்கள். சமூகவலைத்தளங்களில் பிக் பாஸ் குறித்த விவாதங்கள் அதிகமாக இடம்பெறுவதால் இதில் இடம்பெற்ற போட்டியாளர்கள் அதிகக் கவனம் பெற்று புகழை அடைந்துள்ளார்கள்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளதாக விஜய் டிவி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. கமல் நடித்த இந்நிகழ்ச்சி தொடர்பான விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com