
கோமாளி பட வெற்றிக்குப் பிறகு லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் - பூமி. ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை லக்ஷ்மண் இயக்கியுள்ளார்.
பூமி படத்துக்கு இசை - இமான். ஜெயம் ரவியின் ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.
பூமி, ஜெயம் ரவியின் 25-வது படம். டிக் டிக் டிக், அடங்க மறு, கோமாளி என ஹாட்ரிக் வெற்றிகளை ஜெயம் ரவி அடைந்துள்ளதால் அடுத்து வரும் அவருடைய படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பூமி படம் மே 1 அன்று வெளியாகவிருந்த நிலையில் அதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பூமி படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.