மீண்டும் இணைந்த தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

இதற்கான அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார்.
மீண்டும் இணைந்த தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

செல்வராகவன் இயக்கிய துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். அதேபோல செல்வராகவனின் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, என்ஜிகே, செல்வராகவன் இயக்கிய தெலுங்குப் படம் எனப் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. செல்வராகவன் இயக்கி இன்னும் வெளிவராத நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி ஆகிய இரு படங்களுக்கும் யுவன் தான் இசை. 

இந்நிலையில் தனுஷ் - செல்வராகவன் - யுவன் கூட்டணி மீண்டும் இணைகிறது. இதற்கான அறிவிப்பை செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இப்படத்தைத் தாணு தயாரிக்கிறார். 8-வது முறையாக யுவனுடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com