92ஆவது ஆஸ்கர் 2020: 4 விருதுகளை அள்ளிய பாரசைட், சிறந்த நடிகராக ஃபீனிக்ஸ் தேர்வு

4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்றது மட்டுமல்லாது சிறந்த படத்துக்கான ஆஸ்கர் வென்ற முதல் ஆங்கிலம் அல்லாத சர்வதேச மொழித் திரைப்படம் எனும் சாதனைப் படைத்தது பாரசைட். 
92ஆவது ஆஸ்கர் 2020: 4 விருதுகளை அள்ளிய பாரசைட், சிறந்த நடிகராக ஃபீனிக்ஸ் தேர்வு

ஹாலிவுட்டில் வெளியான படங்களையும், கலைஞர்களையும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் 92ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஆஸ்கர் விருது வென்ற முதல் ஆங்கிலம் அல்லாத சர்வதேச மொழித் திரைப்படம் எனும் வரலாற்றுச் சாதனைப் படைத்தது பாரசைட். அதுமட்டுமின்றி மொத்தம் 4 ஆஸ்கர் விருதுகளைத் தட்டிச்சென்றது. அதேபோன்று கிளொன் (கோமாளி) கதாபாத்திரத்துக்காக ஆஸ்கர் விருது வென்ற 2ஆவது நபர் எனும் சாதனைப் படைத்தார் வாக்குவின் ஃபீனிக்ஸ்.

விருது பெற்றவர்களின் விவரம் பின்வருமாறு:

சிறந்த நடிகர்: வாக்குவின் ஃபீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை: ரெனே செல்வேகர் (ஜூடி)

சிறந்த திரைப்படம்: பாரசைட்

சிறந்த துணை நடிகர்: பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி) 

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு: ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்

சிறந்த ஆவணப் படம்: ஃபேக்டரி

சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜாக்குலின் டுரன் (வுமன்)

சிறந்த திரைக்கதை: பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த இயக்குநர்:  பாங் ஜூன் ஹோ (பாரசைட்)

சிறந்த சர்வதேசத் திரைப்படம்: பாரசைட்

சிறந்த தழுவப்பட்ட திரைப்படம்: தைக்கா வைத்தி (ஜோ ஜோ ராபிட்)

சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஒலிக்கலவை: 1917

சிறந்த படத்தொகுப்பு மற்றும் ஒலித்தொகுப்பு: ஃபோர்ட் Vs ஃபெராரி

சிறந்த அனிமேஷன் திரைப்படம்: டாய் ஸ்டோரி 4

சிறந்த ஆவணப்படம்: பாரக் மிட்செல் ஒபாமா தம்பதி தயாரித்த அமெரிக்கன் ஃபேக்டரி

சிறந்த பின்னணிப் பாடல்: சர் எல்டன் ஜான், பெர்னி தாபின் (ராக்கெட் மேன்)

சிறந்த பின்னணி இசை: ஹில்டுர் (ஜோக்கர்)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம்: காஸ் ஹிரோ, ஆனி மோர்கன் விவியன் பேக்கர் (பாம் ஷெல்)

சிறந்த விஷுவல் எஃபக்ட்ஸ்: கிாயம் ரோச்சன், கிரேக் பட்லர், டாமினிக் டூயி (1917)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com