தர்பார் தோல்வியால் அடுத்த படத்தில் சம்பளம் குறைக்கப்பட்டதா?: ரஜினி தரப்பு பதில்

வெளியான செய்தி, முற்றிலும் அடிப்படை ஆதாரம் இல்லாத வதந்தியே. இதுபோன்ற செய்தியைத் தவிர்த்துவிடுங்கள் என்று மறுக்கப்பட்டுள்ளது.
தர்பார் தோல்வியால் அடுத்த படத்தில் சம்பளம் குறைக்கப்பட்டதா?: ரஜினி தரப்பு பதில்

ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியானது. முதல் நான்கு நாள்களில் தர்பார் படம் ரூ. 150 கோடி வசூலித்ததாக லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டது. ஆனால், தர்பார் படம் எதிர்பார்த்த அளவில் வசூலை ஈட்டவில்லையென்பதால் ரஜினியிடம் நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்தார்கள் விநியோகஸ்தர்கள். எனினும் தர்பார் படத்தை வட ஆற்காடு - தென் ஆற்காடு, திருநெல்வேலி, மதுரை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், சேலம் ஆகிய பகுதிகளில் விநியோகம் செய்த விநியோகஸ்தர்களைச் சந்திக்க ரஜினியும் முருகதாஸும் மறுத்துவிட்டார்கள். இதையடுத்து, இதுபோல தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டால், வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருப்போம் என்று விநியோகஸ்தர்கள் கூறியுள்ளார்கள்.

இந்நிலையில் தர்பார் படத் தோல்வியால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அடுத்து நடித்து வரும் படத்தில் ரஜினியின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறன், ரஜினியை நேரில் சந்தித்துச் சம்பளத்தைப் பாதியாகக் குறைக்க கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு ரஜினி சம்மதித்தாகவும் தகவல் வெளியான நிலையில் ரஜினி தரப்பு இதை மறுத்துள்ளது. 

வெளியான செய்தி, முற்றிலும் அடிப்படை ஆதாரம் இல்லாத வதந்தியே. இதுபோன்ற செய்தியைத் தவிர்த்துவிடுங்கள் என்று மறுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com