நீலப்பட நட்சத்திரமாகும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் மகள்!

என்னால் என் பெற்றோர்களைச் சார்ந்து இருக்கமுடியாது. இந்தத் துறையில் நுழைவதை அவமானமாகக் கருதவில்லை....
@Tinas1469, Instagram
@Tinas1469, Instagram

ஒரு நீலப்பட நட்சத்திரமாகத் தான் புகழ் பெற விரும்புவதாக புகழ்பெற்ற இயக்குநர் ஸ்பீல்பெர்க்கின் 23 வயது மகள் மிகேலா கூறியுள்ளார்.

உலகம் முழுக்க ரசிகர்களைக் கொண்டவர் ஸ்பீல்பெர்க். சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை இருமுறை வென்றுள்ளார். அவருடைய பல படங்கள் உலகம் முழுக்க வசூலை வாரிக் குவித்து சாதனைகள் படைத்துள்ளன. 

1991-ல் கேட் கேப்ஸாவைத் திருமணம் செய்தார் ஸ்பீல்பெர்க். இருவருக்கும் இது 2-வது திருமணம். ஸ்பீல்பெர்க் - கேப்ஸா குடும்பத்தில் 7 குழந்தைகள் உண்டு. ஸ்பீல்பெர்க்கின் 27 வயது மகன் சாயர் ஸ்பீல்பெர்க், நடிகராக அறிமுகமாகவுள்ளார். ஹனிடியூ என்கிற படத்தின் மூலம் நடிகராகிறார் சாயர். மில்பர்ன் இப்படத்தை இயக்கியுள்ளார். 

இந்நிலையில் ஸ்பீல்பெர்க்கின் 23 வயது மகள் மிகேலா, தான் ஒரு நீலப்பட நட்சத்திரமாக விரும்புவதாக சன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மிகேலா, ஸ்பீல்பெர்க்கின் தத்துப் பிள்ளை. 

தான் ஏற்கெனவே நீலப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்துவிட்டதாகக் கூறும் மிகேலா, ஸ்ட்ரிப் கிளப்பில் டான்சராகப் பணியாற்ற விருப்பப்படுகிறார். ஆபாசப்படத் துறையில் ஒரு பணியாளராக உரிமம் பெற்றபிறகு அப்பணியில் ஈடுபடவுள்ளார். 

இந்தத் தகவல்களைத் தனது பெற்றோர்களிடம் ஃபேஸ்டைம் சமூகவலைத்தளம் வழியாகத் தெரிவித்துள்ளார் மிகேலா. இதற்கு அவர்கள் அதிர்ச்சியடையவில்லை, என் முடிவுக்கு ஆதரவளித்துள்ளார்கள் என்கிறார். 

என் உடலைச் சரியான முறையில் என்னால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. என் உடலை வெறுக்கச் சொல்வதைக் கண்டு சோர்ந்துவிட்டேன். என் விருப்பத்துக்கு எதிராகப் பணியாற்றுவதும் பிடிக்கவில்லை. என் எண்ணப்படிப் பணியாற்றினால் என்னால் அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த முடியும். என்னால் என் பெற்றோர்களைச் சார்ந்து இருக்கமுடியாது. இந்தத் துறையில் நுழைவதை அவமானமாகக் கருதவில்லை. என்னுடைய கவர்ச்சிகரமான விடியோக்களை வெளியிட்டு அதற்கு கிடைத்த வரவேற்பைக் கண்டு தான் இந்த முடிவை எடுத்தேன். இதன் மூலம் என்னால் பணம் சம்பாதிக்க முடியும். அதேநேரம் என் எல்லைகளைத் தாண்ட முடியாது. என் காதலருக்கு விரோதமாகவும் நடந்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இதன்மூலம் ஆபாச விடியோக்களில் மற்றொரு நபருடன் இணைந்து நடிக்காமல், தான் மட்டும் இடம் பெற முடிவு செய்துள்ளார்.

மிகேலா, தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களையும் விடியோக்களையும் வெளியிட்டுள்ளார். ஆபாசப்படப் பொழுதுபோக்குத் துறையில் தன் பெயரை சுகர் ஸ்டார் என மாற்றியுள்ளார். இவருடைய இந்த முயற்சிக்கு 47 வயது காதலர் சக் பன்கோவும் துணையாக உள்ளார். 

என் பெற்றோர்களிடம் எப்படிச் சொல்வது என மிகவும் யோசித்தேன். ஆனால் அவர்களுடைய ஆதரவு என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை. என் பாதுகாப்பு தான் அவர்களுடைய முக்கிய விஷயமாக இருந்தது. என் உடலை மதிப்பதற்காகத்தான் இப்பணியில் நான் ஈடுபடுகிறேன். என் காதலர் முதலில் யோசித்தார். அவரும் தற்போது ஆதரவாக உள்ளார். எனினும் பலர் என்னுடைய தந்தைக்காக என் முடிவை எதிர்க்கிறார்கள் என்று பேட்டியளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com