
சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.
ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் தர்பார் படத்தின் விளம்பர உத்தி ஒன்று அனைவரையும் கவர்ந்துள்ளது. இதற்கு முன்பு ரஜினி நடித்த கபாலி படத்துக்கு விமானத்தின் வெளிப்பகுதியில் விளம்பரம் செய்யப்பட்டது. அதேபோல தற்போது சென்னை - ஹைதராபாத் செல்லும் விமானத்தில் தர்பார் படத்தின் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. இந்த விளம்பரத்தைக் கொண்டுள்ள விமானத்தின் புகைப்படத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G