'தளபதி 65' தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்?

நடிகர் விஜய்யின் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
'தளபதி 65' தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்?

நடிகர் விஜய்யின் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது. 

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடிப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

இந்நிலையில், விஜய்யின் 65-ஆவது படம் தொடர்பான புதுத் தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ட்விட்டரில் தளபதி 65 என்ற ஹேஷ்டாக் உடன் வலம் வரும் இதில், நடிகர் விஜய்யின் புதிய படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப்போவதாகக் கூறப்படுகிறது.

ஷங்கர், முருகதாஸ் அல்லது அட்லி இப்படத்தை இயக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டாலும், புது இயக்குநர் ஒருவருடன் விஜய் இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக, விஜய்யின் சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com