கிருஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்புக்காட்சி இல்லை!

கிருஷ்ணகிரியில் தர்பார் பட சிறப்புக்காட்சி இல்லை!

ரஜினியின் தர்பார் பட சிறப்புக்காட்சி கிருஷ்ணகிரி மண்டல சரகத்தில் திரையிடப்படாது என்று போலீஸார் அறிவித்துள்ளனர். 

நடிகர் ரஜினியின் தர்பார் பட சிறப்புக்காட்சி கிருஷ்ணகிரி மண்டல சரகத்தில் திரையிடப்படாது என்று போலீஸார் அறிவித்துள்ளனர். 

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.

இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ள ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. படம் வருகிற ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகவிருக்கிறது. 

இந்நிலையில் தர்பார் படத்தின் சிறப்புக்காட்சி கிருஷ்ணகிரி மண்டல சரகத்தில் திரையிடப்படாது என்று போலீஸார் அறிவித்துள்ளார். கடந்த முறை நடிகர் விஜயின் பிகில் படம் திரையிட தாமதமானதால் பெரிய வன்முறை ஏற்பட்டது. இதன் காரணமாக 50 விஜய் ரசிகர்கள் கைது செய்யப்பட்டனர் . இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இனி கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணத்தில் எந்த நடிகர்களின் படத்திற்கும் அதிகாலையில் ரசிகர் மன்ற சிறப்புக் காட்சி அனுமதி கிடையாது என போலீசார் அறிவித்துள்ளனர். இதனால் கிருஷ்ணகிரி மற்றும் காவேரிப்பட்டணத்தில் 6 தியேட்டர்களில் ரஜினியின் தர்பார் பட சிறப்பு ரசிகர் மன்ற காட்சி கிடையாது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com