சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் க்வென்டின் டரான்டினோவின் "ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்"
சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் குவென்டின் டொரண்டினோவின் "ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்" படத்திற்காக நடிகர் பிராட் பிட் சிறந்த துணை நடிகருக்கான கோல்டன் க்ளோப் விருதை வென்றார். இது அவரது மூன்றாவது கோல்டன் குளோப் விருது என்பது குறிப்பிடத்தக்கது.

டாம் ஹாங்க்ஸ் ("எ ப்யூட்டிஃபுல் டே இன் தி நெய்பர்ஹுட்"), அந்தோனி ஹாப்கின்ஸ் ("தி டூ போப்ஸ்"), அல் பாசினோ ("தி ஐரிஷ்மேன்") மற்றும் ஜோ பெஸ்கி ("தி ஐரிஷ்மேன்") ஆகியோருடன் பிட் இந்த விருதுக்கான பரிந்துரையில் இருந்தார்.

பிராட் பிட் விருதைப் பெறும்போது ரசிகர்கள் மற்றும் அவையில் இருந்தவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து நின்று கைத்தட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர். 

"புனித மோலி," என்று பிராட் பிட் விருது பெற்றதும் ஏற்புரையைத் தொடங்கினார். அவர் கூறுகையில்: "ஹாலிவுட் வெளிநாட்டு பத்திரிகைக் கழகத்திற்கு மிக்க நன்றி. மேலும் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அல் பாசினோ உள்ளிட்டோருடன் இவ்விருதுக்கு பரிந்துரைக்கப்படுவது எனக்குப் பெருமை" என்றார். "நான் என்னுடைய நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கும்போது இவர்கள் எல்லாம் எனக்கு கடவுளைப் போன்றவர்கள். இது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய மரியாதை" என்று பிராட் பிட் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பழம்பெரும் நடிகரான ரிக் டால்டன் (லியோனார்டோ டிகாப்ரியோ) மற்றும் அவரது டூப் கிளிஃப் பூத் (பிட்) ஆகியோரின் கதாபாத்திரங்களாக "ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்" படத்தில் நடித்தனர். இது உண்மை கலந்து புனையப்பட்ட கற்பனைக் கதை.  இயக்குநர் டொரண்டினோ பிரபல  சார்லஸ் மேன்சன் கொலைகளின் பின்னணியில் இந்தக் கதையை நெய்துள்ளார்.

பிராட் பிட் டொரண்டினோவிற்கும் அவரது இணை நடிகரான டிகாப்ரியோவிற்கும் நகைச்சுவையுடன் நன்றி தெரிவித்தார்.

"என் குற்றத்தில் பங்குதாரர் அவர் என்று தொடங்கி, "டைட்டானிக்" படம் குறித்து நகைச்சுவையுடன் அவர் கூறியது, "டிகாப்ரியோ ஒரு ஆல்-இன்.ஆல் ஸ்டார்,  அவர் ஒரு ஜென்ட்டில்மேன். நீங்கள் இல்லாமல் நான் இங்கே இருக்க மாட்டேன், நண்பரே - அந்த டைட்டானிக் கப்பலை உங்களுடன் நான் பகிர்ந்திருப்பேன்," என்று அவர் நகைச்சுவையாகக் கூறினார், 1997-ஆம் ஆண்டில் டிகாப்ரியோவின் டைட்டானிக் கதாபாத்திரத்தில் அவர் கடலில் மூழ்கி விடுவதைத்தான் பிட் நகைச்சுவையாக நானும் உங்களுடன் வந்திருப்பேன் என்று குறிப்பிட்டார்.

இந்த பஞ்ச்லைனுக்கு டிகாப்ரியோ ரசித்து சிரித்தார்.

பிராட் பிட் தனது பெற்றோருக்கு நன்றி தெரிவித்ததோடு, தனது காதல் வாழ்க்கை குறித்த வதந்திகளைப் பற்றியும் தெளிவு படுத்தினார்.

"எல்லோருக்கும் வணக்கம் சொல்ல விரும்புகிறேன், ஹாய்," என்றபடி பிராட் பிட் தனது கைகளை அகலமாக விரித்தார்: "அவர்கள் ஓசர்க்ஸில்தான் இருக்கிறார்கள், நான் என் அம்மாவை அழைத்து வர விரும்பினேன், ஆனால் என் அருகில் அமர்ந்திருக்கும் அனைவரையுமே நான் டேட்டிங் செய்வதாகவே கூறுகிறார்கள். " என்றார்

அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான ஜெனிபர் அனிஸ்டன் அவரது நகைச்சுவையைக் கேட்டு சிரித்தார்.

இறுதியில் பிராட் பிட் ஒரு இனிப்புச் செய்தியுடன் தன் உரையை முடித்தார்.

"நாளை இருக்க வாய்ப்பு இருந்தால் தயவு செய்து கனிவுடன் இருங்கள், இதுதான் எல்லோருக்கும் தேவை என்று நினைக்கிறேன்," என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com