Enable Javscript for better performance
Complaint against Cable TV- Dinamani

சுடச்சுட

    

    மதுரை கேபிள் டிவியில் ஒளிபரப்பான தர்பார்: லைகா நிறுவனம் புகார்

    By எழில்  |   Published on : 13th January 2020 05:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    darbar_newposter12xx

     

    ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கடந்த வியாழன் அன்று வெளியானது.

    இந்நிலையில் தர்பார் படம் மதுரை கேபிள் சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்படுவதாக ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் புகார் தெரிவித்தார்கள்.

    இந்த விவகாரம் குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    மதுரை கேபிள் சேனலில் தர்பார் படம் சட்டவிரோதமாக ஒளிபரப்பான தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்தோம். இதையடுத்து மதுரை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். தமிழ்த் திரையுலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai