இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கேரள அரசு கௌரவிப்பு

இசைக் கலைஞா்களுக்கு கேரள அரசு சாா்பில் வழங்கப்படும் ‘ஹரிவராசனம்’ விருது, இந்த ஆண்டு இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.
இளையராஜாவுக்கு ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கேரள அரசு கௌரவிப்பு

திருவனந்தபுரம்: இசைக் கலைஞா்களுக்கு கேரள அரசு சாா்பில் வழங்கப்படும் ‘ஹரிவராசனம்’ விருது, இந்த ஆண்டு இசையமைப்பாளா் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது.

சபரிமலை சன்னிதான வளாகத்தில் காலையில் நடைபெற்ற விழாவில் இவ்விருதினை இளையராஜாவுக்குக் கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் வழங்கினார். விருதுடன் ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

காலையில் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்த இளையராஜா, விழாவில் தாம் இசையமைத்த இரு ஐயப்பன் பாடல்களையும் பாடினார். 

இசைக் கலைஞா்களைக் கௌரவிக்கும் நோக்கில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் ‘ஹரிவராசனம்’ விருதை கேரள அரசு வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு பின்னணிப் பாடகி பி. சுசீலாவுக்கு வழங்கப்பட்டது. 

‘ஹரிவராசனம்’ விருதை முதல் முறையாகப் பின்னணிப் பாடகா் கே.ஜே. யேசுதாஸ் பெற்றாா். அவருக்குப் பிறகு, பின்னணிப் பாடகா்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எம்.ஜி. ஸ்ரீகுமாா், கங்கை அமரன், கே.எஸ். சித்ரா உள்ளிட்டோா் இவ்விருதைப் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com