அஜித்துக்கு நாயகி ஆகிறாரா ரஜினிகாந்த் பட நாயகி?

வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக 'காலா' பட நாயகி ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக திரைப்பட வட்டா ர ங்கள் தெரிவிக்கின்றன.
அஜித்
அஜித்

சென்னை: வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக 'காலா' பட நாயகி ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக திரைப்பட வட்டா ர ங்கள் தெரிவிக்கின்றன.

'நேர் கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு 'வலிமை'எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா. வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. 

படத்தின் மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் முடிவான நிலையில் கதாநாயகி மட்டும் முடிவாகாமல் இருந்து வந்தது. எனவே அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள்மட்டும் முதலில் ஹைதாராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வந்தது.   

இந்நிலையில்  வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக 'காலா' பட நாயகி ஹுமா குரேஷி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஹுமாவை படக்குழுவினர் சந்தித்து அவருக்கு கதை சொல்லப்பட்டதாகவும், நாயகி பாத்திர உருவாக்கம் அவருக்கு பிடித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இன்னும் அவர் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  ஹுமாவும் சமீபத்தில் விரைவில் சென்னைக்கு படப்பிடிப்புக்குச் செல்ல உள்ளதாக ட்வீட் செய்திருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

முன்னதாக நடிகர் பிரசன்னா இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானதும், பின்னர் அதனை அவர் மறுத்திருந்ததும் நினைவிருக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com