கவர்ச்சி நடிகையாக என்னைச் சித்தரிக்க வேண்டாம்: நடிகை சோனா வேண்டுகோள்!

கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்தான்...
கவர்ச்சி நடிகையாக என்னைச் சித்தரிக்க வேண்டாம்: நடிகை சோனா வேண்டுகோள்!

மலையாளப் படமான பச்ச மாங்காவில் பிரதாப் போத்தன், சோனா போன்றோர் நடித்துள்ளார்கள். ஜெயேஷ் இயக்கிய இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் தான் நடித்த விதம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் நடிகை சோனா. அவர் கூறியதாவது: 

பச்ச மாங்கா படம் ஒரு கனமான கதையை அடிப்படையாகக் கொண்ட படம். நம் பாலு மகேந்திரா சார் படம் போல பக்கா க்ளாஸியான படம் அது. அப்படத்தின் டிரெய்லரில் என் உடை மற்றும் சிறிது நேர நடிப்பைப் பார்த்து கவர்ச்சியான நடிகை என்பது போன்ற பிம்பத்தை பலர் ஏற்படுத்தி வருகிறார்கள். அது உண்மை அல்ல. கேரளாவில் பெண்கள் எப்படி உடை அணிவார்களோ அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்பதால்தான் படத்தில் அப்படியான உடையை அணிந்திருந்தேன். இந்தப் படத்தின் மூலமாக என்னை கவர்ச்சி நடிகை என்று சித்தரிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன். இது மிக சிறப்பான படம். என் கதாபாத்திரமும் அப்படியே என்று கூறியுள்ளார்.

ஷாஜஹான், குசேலன், கோ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார் சோனா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com