கதாநாயகன் ஆன சுஷ்மிதா சென்னின் சகோதரர்!

சுஷ்மிதாவின் சகோதரர் ராஜீவ் சென், நடிகராக பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
கதாநாயகன் ஆன சுஷ்மிதா சென்னின் சகோதரர்!

பிரபல நடிகை சுஷ்மிதா சென்னின் சகோதரர் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். 

1994-ல் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென், 2010 வரை தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். கடந்த 10 வருடங்களில் ஒரு வங்காளப் படத்திலும் ஒரு இணையத் தொடரிலும் மட்டும் நடித்துள்ளார்.

இந்நிலையில் சுஷ்மிதாவின் சகோதரர் ராஜீவ் சென், நடிகராக பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். நடிகர் விவேக் ஓப்ராய் தயாரிக்கும் இடி: கேன் யூ சால்வ் யுவர் ஓன் மர்டர் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அக்டோபர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்கம் - விஷால் மிஸ்ரா.

படங்களும் நடிப்பும் என் வாழ்க்கையின் முக்கிய அங்கம். அற்புதமான ஒரு கதாபாத்திரம் முதல் படத்திலேயே எனக்குக் கிடைத்துள்ளது என் அதிர்ஷ்டம். நடிகராக மாற சுஷ்மிதா சென் மிகுந்த ஊக்கமாக இருந்தார் என்று கூறியுள்ளார் ராஜீவ் சென்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com