ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்

இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 91.
ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமானார்

இத்தாலியைச் சேர்ந்த புகழ்பெற்ற இசையமைப்பாளர் என்னியோ மோரிக்கோனி காலமாகியுள்ளார். அவருக்கு வயது 91.

ரோமில் உள்ள மருத்துவமனையில் அவர் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மோரிக்கோனி-யின் மறைவுக்குத் திரையலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். இத்தாலியப் பிரதமரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

50 வருடங்களாகப் பணியாற்றி 500-க்கும் அதிகமான படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களுக்கு இசையமைத்துள்ளார் மோரிக்கோனி. தி குட், தி பேட் அண்ட் தி அக்லி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் தி வெஸ்ட், தி மிஷன், சினிமா பாரடைசோ போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்து கவனம் பெற்றார். 

ஹாலிவுட் படங்களில் பின்னணி இசையின் மூலம் கதைகளுக்கு வலுவூட்டியவர். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் வசனங்களை விடவும் இசைக்கும் சக்தி அதிகம் என்று கூறினார் மோரிக்கோனி. 

87 வயதில் தி ஹேட்ஃபுல் எயிட் படத்தின் மூலம் ஆஸ்கர் வென்றார் மோரிக்கோனி. 2006-ல் திரைப்பட இசையின் பங்களிப்புக்காகக் கெளரவ ஆஸ்கர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆறு முறை ஆஸ்கர் விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 

ஏராளமான ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்தாலும் ரோமைத் தாண்டி அவர் வெளியே செல்லவில்லை. கடைசிவரை தனது தாய்மொழியைத் தவிர எந்த மொழியிலும் பேச மறுத்தார். உலகின் புகழ்பெற்ற இயக்குநர்களுடன் பணிபுரிந்து விதவிதமான இசையை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளார். 1961-ல் இசையமைப்பாளராக அறிமுகமான மோரிக்கோனி, 1965-73 காலக்கட்டத்தில் மட்டும் 150 படங்களுக்கு இசையமைத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com