குறைக்கப்பட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டம்: நடிகை தாப்சி கண்டனம்

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் மாணவா்களின் கல்விச் சுமையை குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக...
குறைக்கப்பட்ட சிபிஎஸ்இ பாடத்திட்டம்: நடிகை தாப்சி கண்டனம்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் (சிபிஎஸ்இ) குறைக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கு நடிகை தாப்சி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் மாணவா்களின் கல்விச் சுமையை குறைக்க சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை இந்த பாடத்திட்ட குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்தது. அவ்வாறு நீக்கப்பட்ட பாடப்பிரிவுகளில் ஜனநாயக உரிமைகள், மதச்சாா்பின்மை, உணவு பாதுகாப்பு, இந்திய அரசமைப்பின் கட்டமைப்பு, ஜாதி, மதம், பாலினம் உள்ளிட்டவையும் அடங்கும். இதற்கு அரசியல் கட்சியினா் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. கரோனா நோய்த்தொற்று சூழலைப் பயன்படுத்தி உள்நோக்கத்துடன் முக்கிய பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மீது விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்துக்கு நடிகை தாப்சி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஏதேனும் அதிகாரபூர்வ அறிவிப்பை நான் தவறவிட்டு விட்டேனா? அல்லது இவை எல்லாம் எதிர்காலத்துக்குத் தேவைப்படாதா? கல்வியில் சமரசம் செய்துகொண்டால் எதிர்காலம் என்பது இருக்காது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் பாடப்பிரிவுகளை குறைக்கும் திட்டம் ஓராண்டுக்கு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என்றும், தோ்வுகளால் மாணவா்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com