கரோனா பாதிப்பிலிருந்து அமிதாப் பச்சன் குணமாகும் வரை சிறப்பு யாகம் நடத்த ரசிகர்கள் முடிவு!

அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கரோனாவிலிருந்து மீண்டு வரும் வரை யாகம் நடத்தவுள்ளதாக...
கரோனா பாதிப்பிலிருந்து அமிதாப் பச்சன் குணமாகும் வரை சிறப்பு யாகம் நடத்த ரசிகர்கள் முடிவு!

அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வரை மகா மிருத்யுஞ்ஜய யாகம் வளர்க்க அமிதாப் பச்சன் ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்துள்ளார்கள். 

கரோனா நோய்த்தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதுதொடா்பாக ட்விட்டரில் அமிதாப் பச்சன் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது: நான் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினா், பணியாளா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளது. என்னை கடந்த 10 நாள்களில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் மேலும் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது.

மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குறைந்தது ஏழு நாள்களாவது மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வரும் வரை மகா மிருத்யுஞ்ஜய யாகம் வளர்க்க அமிதாப் பச்சன் ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்துள்ளார்கள். இதற்காக கொல்கத்தாவில் உள்ள அமிதாப் ரசிகர்கள் சிறப்பு யாகத்தை நடத்தி வருகிறார்கள். அமிதாப் பச்சன் குடும்பத்தினர் கரோனாவிலிருந்து மீண்டு வரும் வரை யாகம் நடத்தவுள்ளதாக அமிதாப் பச்சன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சஞ்ஜோய் படோடியா கூறியுள்ளார். கொல்கத்தாவில் அமிதாப் பச்சனுக்கென்று கோயில் ஒன்று உள்ளது. அக்கோயிலில் 25 கிலோ எடை கொண்ட அமிதாப் பச்சனின் சிலை ஒன்று உள்ளது. அக்கோயிலில் யாகத்தை நடத்த முடிவு செய்துள்ளார்கள். ஆனால் மழை காரணமாக தற்போது சஞ்ஜோய் ஃபிளாட்டில் யாகத்தை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த யாகம் நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com