விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்: வனிதா விஜயகுமார் கண்ணீர்

என்னைக் கீழ்த்தரமாக விமர்சிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
விமர்சனங்களால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்: வனிதா விஜயகுமார் கண்ணீர்

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம் என நடிகை வனிதா விஜயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகை வனிதா விஜயகுமாா் கடந்த மாதம் பீட்டா் பால் என்பவரை மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டாா். அவரது மனைவி, தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் உடனே புகாா் அளித்தாா். 

இதையடுத்து வனிதா விஜயகுமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமரிசித்துக்கொண்டார்கள். வனிதா விஜயகுமாரின் திருமணத்தை எதிர்த்து தயாரிப்பாளர் ரவீந்திரன், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் போன்ற திரையுலகினரும் பேட்டி கொடுத்தார்கள். சமூகவலைத்தளங்களில் வனிதாவின் நடவடிக்கைகளைப் பலரும் விமரிசித்துள்ளார்கள். இதனால், சமூக ஊடகங்களில், தன்னைப் பற்றி அவதூறு தகவல் வெளியிட்டவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபல நடிகை வனிதா விஜயகுமாா் சென்னை போரூா் எஸ்.ஆா்.எம்.சி. காவல் நிலையத்தில் புகாா் செய்துள்ளாா்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தன்னை விமர்சிக்கும் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் வனிதா விஜயகுமார். பிறகு செய்தியாளர்களிடம் கண்ணீருடன் வனிதா பேசியதாவது:

என்னைப் பற்றி சூர்யா தேவி தவறாகப் பேசியதால் அவரைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேச வேண்டாம் என தயாரிப்பாளர் ரவீந்திரனிடம் கூறினேன். ஆனால் அவர் தொடர்ந்து என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறார். 

பிக் பாஸில் ஏன் அப்படிப் பேசினேன் எனச் சிலர் கேட்கிறார்கள். பிக் பாஸும் வாழ்க்கையும் ஒன்றல்ல. பிக் பாஸில் ஜெயிப்பதற்காக சில விஷயங்களைச் செய்வோம். ஆனால் வாழ்க்கை என்பது வேறு.

எனக்கு 3 குழந்தைகள் உள்ளார்கள். என் மகன் நன்றாக உள்ளான். அவருடைய அப்பா என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறார். ஒரு தாயாக நான் சரியாகத்தான் உள்ளேன். எனக்கு நாற்பது வயதாகிறது. ஒரு துணை வேண்டும் என்பதற்காக வெளிப்படையாக ஒரு விஷயம் செய்தேன். அதில் சில சிக்கல்கள் உள்ளன. அதை நான் சட்டரீதியாக நான் பார்த்துக்கொள்வேன். இதற்காக என்னைக் கீழ்த்தரமாக விமர்சிப்பதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள். வெளியே செல்லவே பயமாக உள்ளது. இணையத் துன்புறுத்தல் அதிகமாக உள்ளது. இதை உடனடியாகக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். காவல்துறை அதிகாரியிடம் பேசியுள்ளேன். இரு நாள்களில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com