மருத்துவர்கள் கடவுள்கள்: அமிதாப் பச்சன் உருக்கம்

தூய வெள்ளை உடை, உன்னதமான சேவை மனப்பான்மை.... அவதிப்படுபவர்களை அரவணைத்துக் கொள்ளும் திறன்
மருத்துவர்கள் கடவுள்கள்: அமிதாப் பச்சன் உருக்கம்

சந்தேகமின்றி மருத்துவர்கள் கடவுள்கள் என்று அமிதாப் பச்சன் ட்வீட் வெளியிட்டுள்ளார்.

கரோனா நோய்த்தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

இதுதொடா்பாக ட்விட்டரில் அமிதாப் பச்சன் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது: நான் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது குடும்பத்தினா், பணியாளா்களிடம் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வரவேண்டியுள்ளது. என்னை கடந்த 10 நாள்களில் சந்தித்த அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவித்தாா்.

அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா என அமிதாப் பச்சன் குடும்பத்தில் மேலும் 3 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது.

மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் குறைந்தது ஏழு நாள்களாவது மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

இந்நிலையில் மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களை மிகவும் பாராட்டி ட்வீட் வெளியிட்டுள்ளார் அமிதாப் பச்சன். அவர் கூறியதாவது:

சந்தேகமின்றி மருத்துவர்கள் கடவுள்கள்.‌ தூய வெள்ளை உடை, உன்னதமான சேவை மனப்பான்மை....அவதிப்படுபவர்களை அரவணைத்துக் கொள்ளும் திறன், கனிவும் கருணையும் கொண்டவர்கள், மனிதத் தன்மையை உயர்த்திப் பிடிப்பவர்கள் அவர்கள்தான் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com