தானா சேர்ந்த கூட்டம் போஸ்டருக்கும் பிச்சைக்காரன் 2 போஸ்டருக்கும் உள்ள ஒற்றுமை!

அதில் சூர்யா, இதில் விஜய் ஆண்டனி என வித்தியாசம் தவிர இரண்டு போஸ்டர்களிலும் ஒரே கூட்டம் தான்!
தானா சேர்ந்த கூட்டம் போஸ்டருக்கும் பிச்சைக்காரன் 2 போஸ்டருக்கும் உள்ள ஒற்றுமை!

விஜய் ஆண்டனிக்கும் இயக்குநர் சசிக்கும் பெரிய திருப்புமுனையாக அமைந்த பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தில் சசி இடம்பெறவில்லை. அவர் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட சில படங்கள் உள்ளதால் பிச்சைக்காரன் 2 படத்துக்கான கதையைத் தான் எழுதி வருவதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் ஆண்டனி கூறினார். 

இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய் ஆண்டனி. இதையடுத்து பிச்சைக்காரன் 2 படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சசிக்குப் பதிலாக விஜய் ஆண்டனியே இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் இயக்குநர் தேர்வில் அவர் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

66-வது தேசியத் திரைப்பட விருதுகளுக்கான பட்டியலில் சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வானது - பாரம். ப்ரியா கிருஷ்ணசாமி தயாரித்து இயக்கியிருந்தார். 

இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தை ப்ரியா கிருஷ்ணசாமி இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. அதில் கூட்டத்தைப் பார்ப்பது போல விஜய் ஆண்டனி நிற்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதில் இடம்பெற்றிருந்த கூட்டம், ஏற்கெனவே வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தின் போஸ்டரில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் சூர்யா, இதில் விஜய் ஆண்டனி என வித்தியாசம் தவிர இரண்டு போஸ்டர்களிலும் ஒரே கூட்டம் தான்!

இரு போஸ்டர்களிலும் உள்ள இந்த ஒற்றுமை குறித்து சமூகவலைத்தளங்களில் பலரும் எழுதியுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com