விக்ரமை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்

ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
விக்ரமை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ்

ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். கரோனா ஊரடங்கு காரணமாக மே 1 அன்று வெளியாகவிருந்த இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இது விக்ரமின் 60-வது படம்.

விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

பொன்னியின் செல்வன், கார்த்திக் சுப்புராஜ் படம் என இரு படங்களில் ஒரே சமயத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் விக்ரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com