புதிய தளத்தில் இசை அனுபவங்களைப் பகிரவுள்ள இளையராஜா

இசை ஓடிடி என்கிற புதிய தளத்தில் தன்னுடைய இசை அனுபவங்களைக் கூறவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
புதிய தளத்தில் இசை அனுபவங்களைப் பகிரவுள்ள இளையராஜா

இசை ஓடிடி என்கிற புதிய தளத்தில் தன்னுடைய இசை அனுபவங்களைக் கூறவுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.

தன்னுடைய பிறந்த நாளுக்காக தனது யூடியூப் தளத்தில் அவர் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லத் துடிதுடித்துக் கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களே, உங்களையும் என்னையும் சந்திக்க விடாமல் இந்த கரோனா காலக்கட்டம் தடுக்கிறது. உங்கள் அன்பு உள்ளங்களை நான் நன்றாகவே அறிவேன். உங்களுடன் இசை வடிவில் தினமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

வெறும் இசை வந்தால் மட்டும் போதுமா, நான் வரவேண்டாமா உங்கள் இல்லத்துக்கு? உங்கள் இல்லம் தேடி நானே நேரடியாக வருகிறேன், இசை ஓடிடி மூலமாக. ஓவ்வொரு பாடலும் எப்படி உருவானது, அதைப் பதிவு செய்ய எவ்வளவு சிரமப்பட்டோம் என்பதைப் பற்றி சொல்லவிருக்கிறேன். வேறு எந்த சேனலிலும் கேட்கமுடியாத தகவல்கள் இதில் வெளியாகும். உலகின் மாபெரும் இசைக்கலைஞர்கள் என்னைப் பற்றிய அபிப்ராயங்களைப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார்கள். புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும் இதில் பங்கு பெற்று சுவாரசியமான தகவல்களை அளிக்கக் காத்திருக்கிறார்கள். இதெல்லாம் உங்கள் வீடு தேடி இசை ஓடிடி மூலமாக வருகிறது. அந்த நாளுக்காகக் காத்திருங்கள். என்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உங்கள் வீடு தேடி வந்துகொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com