வெடி வைத்து கருவுற்ற பெண் யானை கொல்லப்பட்ட சம்பவம்: மேனகா காந்தி மீது நடிகை பார்வதி சாடல்!

கேரளத்தில் கருவுற்ற பெண் யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேனகா காந்தியைச் சாடியுள்ளார் பிரபல மலையாள நடிகையான பார்வதி.
வெடி வைத்து கருவுற்ற பெண் யானை கொல்லப்பட்ட சம்பவம்: மேனகா காந்தி மீது நடிகை பார்வதி சாடல்!
கேரளத்தில் கருவுற்ற பெண் யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேனகா காந்தியைச் சாடியுள்ளார் பிரபல மலையாள நடிகையான பார்வதி.
கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே உள்ள சைலன்ட் வேலி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணி யானை ஒன்று, கடந்த சில தினங்களுக்கு முன் உணவு தேடி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்தது. அப்போது, சில விஷமிகள், அன்னாசி பழத்துக்குள் சக்திவாய்ந்த வெடிபொருளை வைத்து அந்த யானைக்கு கொடுத்துள்ளனா். அந்தப் பழத்தைச் சாப்பிடுவதற்கு முயன்றபோது, அதிலிருந்த வெடிபொருள் வெடித்ததில் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, வலியால் துடித்த அந்த யானை, மக்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் வெள்ளியாறில் தண்ணீரில் நின்றபடி கடந்த 27-ஆம் தேதி உயிா்விட்டது. அந்த யானை தண்ணீரில் நின்றபடி உயிா்விடும் புகைப்படம் தீவிரமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த விவகாரம் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் இச்சம்பவம் தொடா்பாக அதிா்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனா்.
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, ட்விட்டரில் கூறியதாவது:
மலப்புறம் பகுதி குற்றச்செயல்களுக்குப் பெயர் போனது, முக்கியமாக விலங்களுக்கு எதிராக. மிருகங்களைக் கொல்பவர் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. எனவே அவர்கள் தொடர்ந்து இதைச் செய்கிறார்கள் என்றார்.
இதையடுத்து மேனகா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல் அவருடைய ட்வீட்டுக்குப் பதில் அளிப்பது போல தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் பிரபல மலையாள நடிகை பார்வதி. அவர் கூறியதாவது:
வெடிப் பொருள்கள் கொண்ட பொறியில் மிருகங்கள் சிக்கி இரையாவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இது தண்டனைக்குரிய குற்றம். நடந்ததைக் கேள்விப்படும்போது வேதனையளிக்கிறது. ஆனால் சம்பவம் நடந்த மாவட்டத்தை வைத்து வெறுப்புணர்வை வளர்ப்பவர்கள் தங்கள் செயலை எண்ணி வெட்கப்படவேண்டும். குறிப்பிட்ட மாவட்டம் என்பதனால் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக எண்ணினால் அது தவறு. நீங்களாக ஒன்றை யூகித்து இன்னும் எவ்வளவுதான் வெறுப்பை வளர்ப்பீர்கள்? இதை இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு சந்தர்ப்பமாக எப்படி மாற்றுகிறீர்கள்? வெறுப்புப் பிரசாரம் திகைக்க வைக்கிறது. பிரச்னையில் கவனம் செலுத்துங்கள். உண்மை நிலவரத்தைப் பேசுங்கள் என்று கூறியுள்ளார்.
கேரளத்தில் கருவுற்றிருந்த யானை அன்னாசி பழத்துக்குள் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடா்புடையவா்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவாா்கள் என்று மாநில முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் மதவெறியைத் திணிக்கவும் முயற்சிக்கின்றனா். கேரள சமூகம் எப்போதுமே அநீதிக்கு எதிராக வெகுண்டெழக் கூடியது என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com