
உடுக்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக அறிமுகமாகவிருந்த பாலமித்ரன் காலமாகியுள்ளார்.
சஞ்சனா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள உடுக்கை படத்தின் இயக்குநர் பாலமித்ரன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமாகியுள்ளார். உடுக்கை படத்தின் படப்பிடிப்புப் பணிகள் 95 சதவீத முடிவடைந்துவிட்ட நிலையில் ஊரடங்கு காரணமாக அதன் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பாலமித்ரனின் மறைவு படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பாலமித்ரனின் மறைவை உடுக்கை படத்தில் நடித்துள்ள சஞ்சனா சிங் வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
என்னுடைய படத்தின் இயக்குநரின் மரணச் செய்தி கேட்டு உடைந்து போயிருக்கிறேன். மிகவும் அன்பான மனிதர். அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என எழுதியுள்ளார்.
So devastated to hear the news my director for the movie #udakkai such a kind & loving person gone too soon. My heart aches condolences to his family @dir_balamithran @BarathiDance pic.twitter.com/dwykHcdREF
— Sanjana Singh (@SanjanaSingh_) June 10, 2020