வீட்டுக்குள்ளேயே கையுறை, முகக்கவசம் அணிந்து கொள்கிறேன்: ஜான்வி கபூர்

திடீரென வீட்டில் மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் எல்லோரும் ஆடிப்போய் விட்டோம்.
வீட்டுக்குள்ளேயே கையுறை, முகக்கவசம் அணிந்து கொள்கிறேன்: ஜான்வி கபூர்

அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் வலிமை ஆகிய படங்களின் தயாரிப்பாளர் போனி கபூர். மறைந்த ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர், பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக உள்ளார்.

போனி கபூர் வீட்டின் பணியாளரான 23 வயது சரண் சாகுவுக்கு முதலில் கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. சரண் சாகுவுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானவுடன் போனி கபூர் குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள், அலுவலக ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில், போனி கபூர் வீட்டில் மேலும் இரு பணியாளர்களுகு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

தற்போது மூவரும் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு விட்டார்கள். இதுபற்றி போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் கூறியதாவது:

குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடிந்ததால் ஊரடங்குக் காலத்தை மகிழ்ச்சியுடன் கழித்து வந்தோம். திடீரென வீட்டில் மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதால் எல்லோரும் ஆடிப்போய் விட்டோம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், வீட்டிலிலிருந்து ஒருவர் கூட வெளியே செல்லவில்லை. எப்படி இது நடந்தது என எங்களுக்குப் புரியவில்லை.

இரவில் அப்பா, சுடு தண்ணீர் கேட்டாலும் கையுறையும் முகக்கவசமும் அணிந்துதான் சமையல் அறைக்குச் சென்று தண்ணீர் எடுத்துத் தருகிறேன். பாதுகாப்பு உணர்வுடன் செயல்படவேண்டும் என்பதால் இப்படிச் செய்கிறேன். இச்சமயத்தில் அனைவரும் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும். அப்பாவையும் குஷியையும் தொடர்ந்து கவனித்து வருகிறேன். எல்லாப் பொறுப்புகளும் என்னிடம் இருக்கவேண்டும் என எண்ணுகிறேன். இது கடினமாக இருந்தாலும் எனக்குத் திருப்தியைத் தருகிறது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com