தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பாடல்: கமல் ஹாசன் தகவல்

தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பாடல்: கமல் ஹாசன் தகவல்

தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பாடல் ஒன்று உள்ளது என கமல் ஹாசன் கூறியுள்ளார்.

தலைவன் இருக்கின்றான் படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பாடல் ஒன்று உள்ளது என கமல் ஹாசன் கூறியுள்ளார்.

கடந்த மாதம் கமல் ஹாசனும் விஜய் சேதுபதியும் இணையம் வழியாக உரையாடி ரசிகர்களை மகிழ்வித்தார்கள். ஓபன் பண்ணா தளத்துடன் இணைந்து இன்ஸ்டகிராமில் நேரலையாக உரையாடினார்கள்.

அடுத்த இணைய உரையாடலில் கமல் ஹாசனும் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்துகொண்டுள்ளார்கள். தலைவன் இருக்கின்றான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில் இருவரும் உரையாடினார்கள். அபிஷேக் ராஜா தொகுத்து வழங்கினார். உரையாடலின் நேரலையை கமல் ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான் சமூகவலைத்தளப் பக்கங்களில் ஒளிபரப்பானது.

இந்நிலையில் தலைவன் இருக்கின்றான் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பாடல் பற்றி இந்த உரையாடலில் கமல் பேசினார். அவர் கூறியதாவது:

ரஹ்மான், உங்களை ஊரே ஒப்புக்கொண்ட பிறகு தான் உங்கள் பாடல்களை நான் கேட்க ஆரம்பித்தேன். இத்தனைக்கும் வழக்கமாக எந்தத் திறமையாக இருந்தாலும் முதலிலேயே நான் கண்டுகொள்வேன். அந்தளவுக்கு ராஜாவின் பாடல்களில் நான் மூழ்கியிருந்தேன்.

ரஹ்மான் தனது டியூன்களின் தன்மையை உடைத்துக்கொண்டே வந்தார். இதன்மூலம் எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தினார். எனக்கு இது பிடித்திருந்தது.

இந்தியன் படத்தில் இடம்பெற்ற கப்பலேறிப் போயாச்சு பாடல் எனக்கு முதலில் பிடிக்கவில்லை. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் அந்தப் பாடல் வேறாக இருந்தது.

இதுவரை நீங்கள் கேட்காத ரஹ்மானின் பாடல் ஒன்று (தலைவன் இருக்கின்றான் படத்துக்காக) மிகச்சிறப்பாக வந்துள்ளது. ரஹ்மானின் பாடல்களிலேயே சிறந்த பாடல் என அதைச் சொல்லலாம். இந்தப் பாடல் வேறு படத்தில் வந்திருந்தால் நான் வயிறு எரிந்திருப்பேன். இதுபோன்ற ஒரு பாடலை நான் கேட்டதில்லை. இந்தப் பாடல் உருவாகத் தாமதமாகும் என எங்கள் படக்குழுவில் நினைத்தார்கள். என்னைப் பாடல் எழுதச் சொன்னார் ரஹ்மான். ஒரே நாளில் பாடல் பதிவாகிவிட்டது. இயக்குநராக ரஹ்மானிடம் பணிபுரிவது சுலபமானது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com