பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் கெளதம் மேனன் இயக்கும் இணையத் தொடர்!

கெளதம் மேனனுடன் இணைந்து இணையத் தொடர் ஒன்றில் பணியாற்றவுள்ளதாகப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கூறியுள்ளார்.
பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவில் கெளதம் மேனன் இயக்கும் இணையத் தொடர்!

கெளதம் மேனனுடன் இணைந்து இணையத் தொடர் ஒன்றில் பணியாற்றவுள்ளதாகப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் கூறியுள்ளார்.

ட்விட்டரில் அவர் எழுதியதாவது:

ஊரடங்குக் காலம் முடிந்த பிறகு கெளதம் மேனனுடன் அமேசான் பிரைமுக்காக ஓர் இணையத் தொடரில் இணையவுள்ளேன். கரோனாவால் நீண்ட காலம் கழித்து பணியாற்றப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

பால்கி இதுவரை எடுத்த ஐந்து படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த பி.சி. ஸ்ரீராம் தான் பால்கியின் அடுத்த படத்துக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார். கடைசியாக, நித்யா மேனன் நடித்த பிராணா என்கிற படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார் பி.சி. ஸ்ரீராம். அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரங் டே என்கிற தெலுங்குப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சிம்பு, த்ரிஷா நடித்த கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்துக்கு அடுத்ததாக ஷாந்தனு, கலையரசன், மேகா ஆகாஷ் நடிப்பில் ஒரு மியூசிக் விடியோவை வெளியிட்டார் இயக்குநர் கெளதம் மேனன். அஜித், அருண் விஜய், த்ரிஷா, அனுஷ்கா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கிய படம் - என்னை அறிந்தால். 2015-ல் வெளியானது. இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கத் திட்டமிட்டு வருவதாக இயக்குநர் கெளதம் மேனன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com