காவல்துறையைப் பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்கு வேதனைப்படுகிறேன்: இயக்குநர் ஹரி

காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிகவும் வேதனைப்படுவதாக இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். 
இயக்குநர் ஹரி
இயக்குநர் ஹரி

காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக மிகவும் வேதனைப்படுவதாக இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார். 

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை - மகன், ஜெயராஜ் - பென்னிக்ஸ் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் ஆகியோர் இதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஜெயராஜ் - பென்னிக்ஸ் மரணத்துக்கு நீதி கேட்டு அரசிடம் முறையிட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இயக்குனர் ஹரி, 'சாத்தான்குளம் சம்பவம்போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது. அதற்கு ஒரேவழி சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே.. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தியுள்ளது.

காவல்துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன்' என்று கடிதம் வாயிலாக தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

இயக்குநர் ஹரி, நடிகர் சூர்யாவை வைத்து சிங்கம் I, II, III மற்றும் விக்ரமை வைத்து சாமி, சாமி ஸ்கொயர் என 5 காவல்துறை சம்மந்தப்பட்ட படங்களை எடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com