விஷாலின் துப்பறிவாளன்-2: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் விஷால் நடித்து இயக்கும் 'துப்பறிவாளன்-2' திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
துப்பறிவாளன்-2
துப்பறிவாளன்-2

சென்னை: நடிகர் விஷால் நடித்து இயக்கும் 'துப்பறிவாளன்-2' திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

2017-ல் விஷால் நடிப்பில் துப்பறிவாளன் படத்தை இயக்கினார் மிஷ்கின். அரோல் கரோலி இசையமைத்த அப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்ததாக உருவாகிறது என்று அறிவிப்பு வெளியானது. மிஷ்கின் இயக்கவுள்ள 'துப்பறிவாளன் 2 ' டத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்றும், துப்பறிவாளன் படத்தில் நடித்த பிரசன்னாவும் இதில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகின.

இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்கள் லண்டனில்நடைபெற்றது. எனினும் சமீபகாலமாக மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டன. படத்தின் பட்ஜெட் தொடர்பாக மிஷ்கின் - விஷால் நட்பில் விரிசல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால் துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் வெளியேறினார். இதையடுத்து படத்தைத் தானே இயக்க முடிவெடுத்தார் விஷால். இதுதொடர்பாக அதிகாரபூர்வ செய்வித்து வெளியானது.

இந்நிலையில்  'துப்பறிவாளன்-2' திரைப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் புதன் மாலை வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் புதன் மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com