தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நேரடி போட்டி

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முரளி இராம நாராயணன், 'அம்மா' டி.சிவா ஆகியோர் தலைமையில் இரு அணிகள் போட்டி களத்தில் இறங்குகின்றன.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்

சென்னை: தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் முரளி இராம நாராயணன், 'அம்மா' டி.சிவா ஆகியோர் தலைமையில் இரு அணிகள் போட்டி களத்தில் இறங்குகின்றன.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை ஜூன் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தற்போது  டி.சிவா - முரளி இராம நாராயணன் இருவரின் தலைமையிலான அணி தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி' என்று டி.சிவாவின் அணிக்குப் பெயரிட்டுள்ளனர். இதில் தலைவராக டி.சிவா, பொருளாளராக முரளிதரன், செயலாளர்களாக தேனப்பன், ஜே.சதீஷ் குமார், துணைத் தலைவர்களாக ஆர்.கே.சுரேஷ், தனஞ்ஜெயன் ஆகியோர் போட்டியிடவுள்ளனர். இந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக கே.ராஜன், ராதாரவி, கே.எஸ்.ஸ்ரீனிவாசன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

இந்த தேர்தலில் 'தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி'யின் சார்பில்  முரளி இராம நாராயணன் தலைவர் பதவிக்கும்  செயலாளர்கள் பதவிக்கு ஆர்.ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர் ( ராஜேஷ்) ஆகிய இருவரும்  போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர் பதவிக்கு சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் மைக்கேல் ராயப்பனும், பொருளாளர் பதவிக்கு எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயினும் போட்டியிடுகின்றனர்.

இவர்களுடன் மூத்த தயாரிப்பாளர்கள், இன்று படம் தயாரிப்பவர்கள், சிறு முதலீட்டு படத்தயாரிப்பாளர்கள் ஆகியோர் என 21 செயற்குழு  உறுப்பினர்கள் பதவிக்கு போட்டிபிடுகின்றனர்.

தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com