இன்றிரவு ஒளிபரப்பாகும் ரஜினி பங்கேற்ற டிஸ்கவரி நிகழ்ச்சி!

இன்றிரவு இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. டிஸ்கவரி ப்ளஸ் செயலியிலும் இந்நிகழ்ச்சியைக் காணமுடியும்.
இன்றிரவு ஒளிபரப்பாகும் ரஜினி பங்கேற்ற டிஸ்கவரி நிகழ்ச்சி!

டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘மேன் வொ்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக அளவில் சிறப்புப் பெற்றது. பியா் கிரில்ஸ் என்ற சாகச வீரா், மயிா் கூச்செறியும் அற்புத சாகசங்களை அடா்ந்த காடுகளிலும், விலங்குகளுக்கு மத்தியிலும் செய்து உலக அளவில் ரசிகா்களைப் பெற்றுள்ளாா். சமீபமாக இந்த நிகழ்ச்சியில் உலகின் முக்கிய பிரமுகா்கள் பங்கேற்கும் பகுதிகள் இடம் பெற்று வருகின்றன. தற்போது இந்த நிகழ்ச்சி தான் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற பெயரில் ஒளிபரப்பாகிறது.

கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள பண்டிப்பூர் புலிகள் காப்பகத்தில் ‘இன் டூ தி வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ என்கிற டிஸ்கவரி தொலைக்காட்சிக்கான நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படப்பிடிப்பில் நடிகா் ரஜினிகாந்த் நிகழ்ச்சித் தொகுப்பாளா் பியர் கிரில்ஸுடன் இணைந்து பணியாற்றினாா். இது ரஜினிகாந்த் பங்கேற்ற முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. கே. பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் இந்த நிகழ்ச்சியை வழங்குகிறது.

ஆபத்துகள் நிறைந்த வனப்பகுதிகளில் இயற்கையோடு ஒட்டி உயிா் வாழும் முறைகளை உணா்த்தும் வகையில் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளாா். குறிப்பாக நீா்வளப் பாதுகாப்பு பற்றி அவா் இந்த நிகழ்ச்சியில் பேசுகிறாா். ரஜினிகாந்த் அடா்ந்த காடுகளில் பயணம் செய்யும் போது, இயல்பான சண்டைக் காட்சிகள், திரையில் அவா் பேசுவது போன்ற பஞ்ச் வசனங்கள், சிறுவா்களுடன் சந்திப்பு என பல சுவாரஸ்ய பகுதிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இன்றிரவு இரவு 8 மணிக்கு இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. டிஸ்கவரி ப்ளஸ் செயலியிலும் இந்நிகழ்ச்சியைக் காணமுடியும்.

இந்த நிகழ்ச்சியில் தன் வாழ்க்கை குறித்து நிறைய பேசியுள்ளார் ரஜினி காந்த். 

நடித்து முடித்தவுடன் அந்த வேலை முடிந்தது. பிறகு ரஜினி காந்தை மறந்துவிடுவேன். சிவாஜி ராவுக்குத் திரும்பிவிடுவேன். அது எனக்கு தொழில் மட்டுமே. யாராவது என்னை நீங்கள் ரஜினி காந்த் என்று சொல்லும்போது தான் ஆமாம், நான் ரஜினி தான் என நினைப்பேன் என்று கூறியுள்ளார். 

என் முழு வாழ்க்கையும் அதியசமானது. அது ஓர் அதிசயம். இந்த நிகழ்ச்சியும் ஓர் உதாரணம். என் வாழ்க்கையில் இப்படி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பேன் என நினைத்துப் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com