நான் இறந்தபிறகும் இதுதான் நிலைமை: மூன்று வருடங்களுக்கு முன்பு ஆதங்கப்பட்ட ரிஷி கபூர்

நான் இறந்தபிறகும் இதுதான் நிலைமை என்று மூன்று வருடங்களுக்கு ரிஷி கபூர் ஆதங்கப்பட்டது ஒருவிதத்தில் நிஜமாகியுள்ளது...
நான் இறந்தபிறகும் இதுதான் நிலைமை: மூன்று வருடங்களுக்கு முன்பு ஆதங்கப்பட்ட ரிஷி கபூர்

நான் இறந்தபிறகும் இதுதான் நிலைமை என்று மூன்று வருடங்களுக்கு ரிஷி கபூர் ஆதங்கப்பட்டது ஒருவிதத்தில் நிஜமாகியுள்ளது.

பாலிவுட் நட்சத்திர நடிகரான ரிஷி கபூா் ரத்தப் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில் மும்பையில் வியாழக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 67.

ரிஷி கபூருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த புதன்கிழமை தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பிறகு, வியாழக்கிழமை காலை 8.45 மணியளவில் காலமானதாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா். புற்றுநோய்க்காக அமெரிக்காவில் சுமாா் ஓராண்டு சிகிச்சை எடுத்துக்கொண்ட ரிஷி கபூா், கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்தியா வந்திருந்தாா்.

அதன் பின்னா் பிப்ரவரி மாதத்தில் இருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். முதலில், குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லி சென்றிருந்தபோது உடல்நலக் குறைவு ஏற்பட்டு தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அதையடுத்து மும்பை அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினாா். இந்நிலையில் அவருக்கு புதன்கிழமை மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவரது உயிா் பிரிந்தது.

ரிஷி கபூரின் உடல் நேற்று மாலை மும்பையின் சந்தன்வாடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. ரிஷி கபூர் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி நீது கபூர், மகன் ரன்பீர் கபூர், ரந்திர், ராஜிவ் கபூர், கரீனா, அர்மான், ஆதர் போன்றோரும் திரையுலகைச் சேர்ந்த அபிஷேக் பச்சன், ஆலியா பட், சயிப் அலி கான் போன்றோரும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.

நான் இறந்தபிறகும் இதுதான் நிலைமை என்று மூன்று வருடங்களுக்கு ரிஷி கபூர் ஆதங்கப்பட்டது ஒருவிதத்தில் நிஜமாகியுள்ளது.

பிரபல ஹிந்தி நடிகரும், மக்களவை உறுப்பினருமான வினோத் கன்னா (70) உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் 2017-ல் காலமானார். வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன், ரிஷி கபூர் உள்ளிட்ட மூத்த நடிர்கள் கலந்துகொண்டார்கள்.

இளம் நடிகர் வினோத் கண்ணாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வராதது குறித்து ரிஷி கபூர் ட்விட்டரில் கூறியதாவது:

அவமானகரமானது. இந்தத் தலைமுறையின் எந்தவொரு நடிகரும் வினோத் கன்னாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை. இத்தனைக்கும் அவர்களுடன் அவர் பணிபுரிந்துள்ளார். மரியாதை செலுத்த இந்தத் தலைமுறை நடிகர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். நான் இறந்தபிறகும் இதுபோன்ற சூழலுக்குப் பழகவேண்டும். இன்றைய நட்சத்திரங்கள் மீது கோபமாக உள்ளேன் என்று கூறினார்.

ரிஷி கபூரின் மறைவுக்கு பிரபல பாலிவுட் நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் சமூகவலைத்தளங்கள் வழியாக தங்களுடைய இரங்கல்களைப் பதிவு செய்தார்கள். எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என சிலரைத் தவிர வேறு யாரும் இறுதிச்சடங்கு நிகழ்வில் அனுமதிக்கப்படவில்லை. வினோத் கண்ணாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த இளம் நடிகர்கள் வராததைக் கண்டு கோபப்பட்ட ரிஷி கபூர், நான் இறந்தபிறகும் இதுபோன்ற சூழலுக்குப் பழகவேண்டும் என்று ட்வீட் செய்தார். அது ஒருவிதத்தில் நிஜமாகியுள்ளது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரால் மட்டுமே ரிஷி கபூருக்கு இறுதி மரியாதை செலுத்த முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com