கேன்ஸ் திரைப்பட விழாவின் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கேன்ஸ் திரைப்பட விழாவின் புதிய திட்டங்கள் குறித்து அறிவிப்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட விழா குறித்த சமீபத்திய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரான்ஸில் உள்ள கேன்ஸ் நகரில் 2020 கேன்ஸ் திரைப்பட விழா மே 12 - 23 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. முதலில் முடிவு செய்த தேதிகளில் கேன்ஸ் பட விழாவை நடத்த முடியாது. இதனால் ஜுன் இறுதி அல்லது ஜுலை ஆரம்பம் வரை பட விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வத் தகவல் வெளியானது.

பிறகு, கேன்ஸ் பட விழாவின் இயக்குநர் ப்ரேமாக்ஸ் ஒரு பேட்டியில் கூறியதாவது: கேன்ஸ் பட விழாவை டிஜிடல் விழாவாக மாற்ற முடியுமா எனக் கேட்கிறார்கள். டிஜிடல் போட்டி? இதுகுறித்து நாங்கள் ஆலோசனை நடத்தவேண்டும். பெரிய திரையில் திரையிட முடியாத படங்களின் வெளியீட்டை ஒத்திவைத்துள்ளார்கள். அதை ஏன் டிஜிடல் சாதனங்களின் மூலம் காண்பிக்க எண்ணுகிறீர்கள்? பெரிய திரையில் திரையிட்டு, பட விழாக்களிலும் திரையிடுவதற்காகத்தான் இயக்குநர்கள் படங்களை உருவாக்குகிறார்கள். அதை ஐ போனில் காண்பிக்க ஏன் முயல்கிறீர்கள்? வேறு வழியில் கேன்ஸ் பட விழாவை நடத்துவதுதான் தீர்வு என நான் நம்பவில்லை என்று கூறினார். பல திரைப்படங்கள் முதலில் கேன்ஸ் பட விழாவில் திரையிடப்பட்டு பிறகுதான் இதர நாடுகளில் திரையிடப்படும். கடந்த வருடம் இதேபோல திரையிடப்பட்ட பாராசைட் படம் கேன்ஸ் விருது மட்டுமல்லாமல் ஆஸ்கர் விருதுகளையும் வென்றது.

இந்நிலையில் கேன்ஸ் பட விழாவின் செய்தித் தொடர்பாளர் தற்போதைய நிலவரம் குறித்து கூறியதாவது:

தற்போதைய சூழலில் கேன்ஸ் பட விழாவை நிர்வாகம் செய்வது கடினமானது. ஜூன் முதல் படங்களின் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிடுவோம். இதன்பிறகு தேர்வு செய்த படங்களை வெனிஸ் பட விழா உள்ளிட்ட இதர திரைப்பட விழாக்களில் திரையிட ஏற்பாடு செய்வோம் என்று கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 67,100 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com