சர்ச்சைக்குரிய விடியோவை நீக்க வேண்டும்: விஜய் சேதுபதி தரப்பு வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய விடியோவை நீக்க வேண்டும் என விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் தலைமைச் செயலாளர் குமரன், காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய விடியோவை நீக்க வேண்டும்: விஜய் சேதுபதி தரப்பு வேண்டுகோள்

சர்ச்சைக்குரிய விடியோவை நீக்க வேண்டும் என விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் தலைமைச் செயலாளர் குமரன், காவல்துறையிடம் மனு அளித்துள்ளார்.

இந்து மத சம்பிரதாயங்களைக் கேலி செய்துள்ளதாக நடிகர் விஜய் சேதுபதி மீது விமரிசனம் எழுந்துள்ளது. ஒரு தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, கோயில்களில் சாமி சிலைகளைக் குளிக்க வைக்கும்போது (அபிஷேகம்) பார்க்க அனுமதிப்பவர்கள் உடை மாற்றும்போது அனுமதிப்பதில்லையே ஏன் என்பதை தாத்தா, பேத்தி கதை மூலம் கேள்வியாகக் கேட்டிருந்தார். இந்த விடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. விஜய் சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மகா சபை அமைப்பு, திருச்சி மாநகரக் காவல்துறையிடமும் இந்து முன்னணி சென்னைக் காவல்துறையிடமும் புகார் மனுக்களை அளித்துள்ளன.

சமூகவலைத்தளங்களில் விஜய் சேதுபதியைப் பலரும் விமரிசித்து வருவதால் சர்ச்சைக்குரிய விடியோவை நீக்க வேண்டும் என விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் தலைமைச் செயலாளர் குமரன், சென்னை எழும்பூர் சைபர் கிரைம் காவல்துறையிடம் மனு அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சியில் மறைந்த கிரேசி மோகனின் நகைச்சுவைத் துணுக்கை விஜய் சேதுபதி மறுபதிவு செய்தார். யதார்த்தமாகப் பேசியதைத் திரித்து இந்துகளுக்கு எதிராகப் பேசியதாக சிலர் வதந்தி பரப்பி வருகிறார்கள். விஜய் சேதுபதி மற்றும் அவருடைய குடும்பத்தினரைத் தரக்குறைவாக விமரிசித்து வருகிறார்கள். இது அவருடைய நற்பெயரைக் குறைக்கிறது. அவதூறுக்குக் காரணமான சர்ச்சைக்குரிய விடியோ பதிவை நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com