ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ பொங்கல் வெளியீடு: அதிகாரபூர்வ அறிவிப்பு

தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168-வது படம்.
ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ பொங்கல் வெளியீடு: அதிகாரபூர்வ அறிவிப்பு

தா்பாா் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இது ரஜினியின் 168-வது படம்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை இயக்கினார் சிவா. தற்போது ரஜினி நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ் உள்ளிட்ட பலா் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறாா்கள். வெற்றி ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்து வருகிறாா்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாகப் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ள நிலையில் அண்ணாத்த படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் உருவாகியுள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட அண்ணாத்த படம், அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com