வலிமை படப் பணிகளை உடனே தொடங்க வேண்டாம் என அஜித் அறிவுறுத்தல்!

வலிமை படத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பே நமக்கு முக்கியம் என
வலிமை படப் பணிகளை உடனே தொடங்க வேண்டாம் என அஜித் அறிவுறுத்தல்!

ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் எனத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர் கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணி மீண்டும் தொடர்கிறது. இருவரும் இணையும் இப்படத்துக்கு வலிமை எனப் பெயரிடப்பட்டுள்ளது. போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - நிரவ் ஷா.

இந்நிலையில் இந்த வாரம் முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்த் திரையுலகினருக்குத் தமிழக அரசு அனுமதி தந்துள்ளது. இதனால் படப்பிடிப்புப் பணிகளும் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி வலிமை படம் தொடர்பான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டாம் எனத் தயாரிப்பாளர் போனி கபூருக்கு அஜித் அறிவுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர், இந்தியன் 2, சக்ரா உள்ளிட்ட பல படங்களின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஆனால் கரோனா வைரஸின் பாதிப்பு குறைந்த பிறகு போஸ்ட் புரொடக்‌ஷன் உள்ளிட்ட வலிமை படம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளலாம். தற்போது வலிமை படத்தில் பணியாற்றும் ஊழியர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பாதுகாப்பே நமக்கு முக்கியம் என போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோரிடம் அஜித் கூறியதாகவும் அதற்கு இருவரும் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் வலிமை படத்தின் வெளியீடு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com