பெண்களின் பாரத்தைக் குறைப்போம்: ஷாந்தனு இயக்கிய குறும்படம் வெளியீடு

வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் பாரத்தைக் குறைக்க ஆண்கள் முயற்சி செய்யவேண்டும் என்கிற கருத்தை...
பெண்களின் பாரத்தைக் குறைப்போம்: ஷாந்தனு இயக்கிய குறும்படம் வெளியீடு

வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் பாரத்தைக் குறைக்க ஆண்கள் முயற்சி செய்யவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் ஷாந்தனு பாக்யராஜ்.

மனைவி கிக்கி விஜய்யுடன் இணைந்து நடித்து, கொஞ்சம் கரோனா நிறைய காதல் என்கிற குறும்படத்தை இயக்கி, அதை இன்று வெளியிட்டுள்ளார் ஷாந்தனு பாக்யராஜ். கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே இந்தக் குறும்படத்தைப் படமாக்கியுள்ளார்.

இயக்குநராக என்னுடைய முதல் முயற்சி. தொழில்முறை உபகரணங்கள் இன்றி ஐபோனில் மட்டுமே படமாக்கப்பட்ட படம் இது என்று கூறியுள்ளார்.

ஷாந்தனுவின் இந்தக் குறும்படத்துக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com