வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலி: நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் நான்கு மாதங்களுக்குத் தத்தெடுப்பு

வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் பெண் வெள்ளைப் புலியை நடிகர் சிவகார்த்திகேயன்
கோப்புப் படம்
கோப்புப் படம்

வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படும் பெண் வெள்ளைப் புலியை நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் நான்கு மாதங்களுக்குத் தத்தெடுத்துள்ளார். இதன் மூலம் இந்த வெள்ளைப் புலியின் நான்கு மாத உணவுக்கான பொறுப்பை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்றுள்ளார்.

சென்னையை அடுத்த வண்டலூரில் தமிழக வனத் துறைக்குச் சொந்தமான அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயங்கி வருகிறது. 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் யானைகள், புலிகள், சிங்கங்கள், நீர் யானைகள், ஊர்வன, பறவைகள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான வன விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

பூங்காவில் உள்ள வன விலங்குகளைப் பொதுமக்கள் தத்தெடுக்கும் திட்டம் கடந்த 2009-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்த வன விலங்குகளை ஒரு நாள் முதல் எவ்வளவு நாள்கள் வேண்டுமானாலும் தத்தெடுத்துக் கொள்ளலாம். அந்த விலங்குகளின் உணவுக்கான தொகையை பூங்கா நிர்வாகத்திடம் வழங்க வேண்டும்.

2018-ம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் அனு என்கிற பெண் வெள்ளைப் புலியைத் தத்தெடுத்தார். இதன் மூலம் அந்தப் புலியின் நாளொன்றுக்கான உணவுத் தொகை ரூ. 1,196-க்கு அவர் பொறுப்பேற்றுள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது. 2018 அக்டோபர் முதல் இந்த மாதம் வரை வெள்ளைப் புலியின் பராமரிப்புக்கு சிவகார்த்திகேயன் உதவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மேலும் நான்கு மாதங்களுக்கு வெள்ளைப் புலியைத் தத்தெடுக்க முன்வந்துள்ளார் சிவகார்த்திகேயன். அவருடைய இந்த நடவடிக்கைக்குப் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com