Enable Javscript for better performance
Vijay Sethupathi's long awaited Idam Porul Yaeval to be released after lockdown- Dinamani

சுடச்சுட

    

    பல வருடங்களுக்குப் பிறகு வெளியாகவுள்ள விஜய் சேதுபதி படம்: இயக்குநர் சீனு ராமசாமி தகவல்

    By DIN  |   Published on : 22nd May 2020 10:23 AM  |   அ+அ அ-   |    |  

    idamporul1

     

    லிங்குசாமி தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கிய படம் - இடம் பொருள் ஏவல். இதன் படப்பிடிப்பு 2013-ல் தொடங்கி, 2014-ல் முடிவடைந்தது.

    விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். 2014 டிசம்பரில் பாடல்கள் வெளிவந்தன. யுவன் - வைரமுத்து கூட்டணி இந்தப் படத்திலிருந்து தான் முதல்முதலாக இணைந்து பணியாற்ற ஆரம்பித்தது.

    தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி சேர்ந்த படம் இது. தயாரிப்பு நிறுவனத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி காரணமாக நீண்ட நாள்களாக வெளிவராமல் இருந்தது.  

    இந்நிலையில் இந்தப் படத்துக்கு ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது. ஊரடங்கு காலம் முடிந்து திரையரங்குகள் இயங்க ஆரம்பித்த பிறகு இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் லிங்குசாமி.

    இதுபற்றி இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் கூறியதாவது:

    சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் "கிருஷ்ணா கிருஷ்ணா" எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல். இது திரைப்படந்தான், ஆனால் எனக்கு பிள்ளை. இயக்குநர் திரு. லிங்குசாமிக்கு நன்றி. #இடம்பொருள்ஏவல் வெளியீடு என்று எழுதியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai