Enable Javscript for better performance
Our film with a female lead is going to reach people in over 200 countries- Dinamani

சுடச்சுட

    

    பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரைமில் நேரடியாக வெளியிடுவது ஏன்?: ஜோதிகா

    By DIN  |   Published on : 23rd May 2020 10:58 AM  |   அ+அ அ-   |    |  

    ponmagal1xx

     

    சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, ஆர். பார்த்திபன் நடிப்பில் ஜேஜே பிரெட்ரிக் இயக்கியுள்ள படம் - பொன்மகள் வந்தாள். இசை - கோவிந்த் வசந்தா.

    கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 50 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன. இதனால் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் மே 29 முதல் வெளியாகவுள்ளது. இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் சூர்யா துணிச்சலுடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார்.

    இந்நிலையில் பொன்மகள் வந்தாள் படத்தின் விளம்பரத்துக்காக இணையம் வழியாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிகா, ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கான காரணத்தைக் கூறினார். அவர் கூறியதாவது:

    ஒரு படம் திரையரங்கில் வெளியாகி அதை ரசிகர்கள் கொண்டாடும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விடவும் வேறொரு பெருமை நடிகர், நடிகைகளுக்கு இருக்காது. 10 மாதங்களோ ஒரு வருடமோ கரோனா ஒழிந்தபிறகு திரையரங்குகள் மீண்டும் இயங்கத் தொடங்கும். அப்போது, ரசிகர்களுக்கு அவைதான் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக இருக்கப் போகின்றன.

    திரையரங்குகள் மீண்டும் இயங்கும்போது வெளிவர பல படங்கள் காத்திருக்கின்றன. இந்தச் சூழலில் பொன்மகள் வந்தாள் படத்தை எப்போது வெளியிடுவது? அதற்கு இரண்டு வருடங்களாகிவிடும். எனவேதான் ஓடிடியில் வெளியிடுகிறோம். கதாநாயகியை மையமாகக் கொண்ட பொன்மகள் வந்தாள் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதன் மூலமாக 200 நாடுகள் வரை சென்றடைய முடிகிறது. தொழில்நுட்பத்தின் துணை இல்லாமல் இது சாத்தியமாகி இருக்காது. நிலைமையை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai