திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ. 45 லட்சம் வழங்கியுள்ள நடிகர் அக்‌ஷய் குமார்!

அந்த அமைப்பின் ஒவ்வொரு தொழிலாளரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ. 3000 தொகையை நேரடியாக...
திரைப்படத் தொழிலாளர்களுக்கு ரூ. 45 லட்சம் வழங்கியுள்ள நடிகர் அக்‌ஷய் குமார்!

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், திரைப்படத் தொழிலாளர்களுக்காக ரூ. 45 லட்சம் வழங்கியுள்ளார்.

CINTAA என்கிற திரைப்படம் மற்றும் சின்னத்திரை அமைப்பின் தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்ய வேண்டும் என்று அக்‌ஷய் குமாரிடமும் தயாரிப்பாளர் சஜித்திடமும் அமைப்பின் சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் அந்த அமைப்பின் ஒவ்வொரு தொழிலாளரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ. 3000 தொகையை நேரடியாக அனுப்பியுள்ளார்கள். பணத்தைப் பெற்றுக்கொண்ட 1500 உறுப்பினர்களும் இதற்கு நன்றி தெரிவித்துள்ளதாக CINTAA அமைப்பின் மூத்த செயலாளர் அமித் பெஹல் கூறியுள்ளார்.

திரைப்படத் தொழிலாளர்களுக்கு இதுபோன்ற உதவிகளை பிரபல பாலிவுட் கலைஞர்கள் செய்து வருகிறார்கள். பாலிவுட் திரையுலகில் ரூ. 15 கோடி மதிப்பு கொண்ட 1 லட்சம் பிக் பஸார் கரோனா நிவாரண கூப்பன்களை (ஒவ்வொன்றும் ரூ. 1,500 மதிப்பு கொண்டது) திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார் அமிதாப் பச்சன். அந்த கூப்பன்களைக் கொண்டு தேவையான பொருள்களை உறுப்பினர்கள் வாங்கிக் கொள்ளலாம். சோனி டிவி மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களுடன் இணைந்து இந்த உதவியை அவர் மேற்கொண்டுள்ளார். FWICE என்கிற திரைப்படத் தொழிலாளர் சங்கத்தில் உள்ள 25,000 தொழிலாளர்களுக்கும் சல்மான் கான் உதவியுள்ளார். தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் அனுப்பி பலருடைய பாராட்டையும் பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com